பட்டாசு வெடித்ததால் வைக்கோல் படப்பில் தீ


பட்டாசு வெடித்ததால் வைக்கோல் படப்பில் தீ
x
தினத்தந்தி 25 March 2021 1:53 AM IST (Updated: 25 March 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு வெடித்ததால் வைக்கோல் படப்பில் தீ

உசிலம்பட்டி,மார்ச்
உசிலம்பட்டி ஒன்றியம், அல்லிகுண்டம் கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அய்யப்பனை வரவேற்பதற்காக கட்சி நிர்வாகிகள், ெதாண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது தீப்பொறி பறந்து அங்குள்ள ஒரு வைக்கோல் படப்பில் தீப்பற்றியது. உடனே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  பிரசாரத்தின்போது ஏற்படும் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

Next Story