பெருமாள் கோவிலில் கருட சேவை


பெருமாள் கோவிலில் கருட சேவை
x
தினத்தந்தி 25 March 2021 1:56 AM IST (Updated: 25 March 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கருட சேவை நடந்தது.

நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டை வேத நாராயணன், அழகியமன்னார், ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி பிரம்ம உற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு திருமஞ்சனம் சிறப்பு தீபாராதனையும், காலையில் பல்லக்கில் வீதி உலாவும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலாவும் நடக்கிறது. நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவில் பெருமாள் இரட்டை கருட சேவையில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் இந்திர விமானத்தில் திருவீதி உலாவும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது.

Next Story