நெல்லையில் 10 பேருக்கு கொரோனா
நெல்லையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கி வருகிறது. நேற்று 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. நாங்குநேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும், ராமயன்பட்டி பகுதியில் 4 வயது சிறுமிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நெல்லை மாநகர பகுதி, பாளையங்கோட்டை யூனியன், களக்காடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,930 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 15,607 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 108 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story