பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சிறிய ரகபட்டாசுகள் தயார்செய்ய அனுமதி வாங்கி விட்டு, பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்வதாக வந்த தகவலின் படி அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் போலீசார் பட்டாசு ஆலைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசு தயார் செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆலையின் குத்தகைதாரர்கள் சிவகாசியை சேர்ந்த குருசாமி (வயது 30), சுரேஷ்ராஜகுமார் (எ) ஜோயல் (36) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story