பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்


பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்
x

பெருமாக்கநல்லூர் அருகே பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெலட்டூர்;
பெருமாக்கநல்லூர் அருகே பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விக்கிரவாண்டி சாலை பணிகள்
அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமம் வழியாக தஞ்சை- விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை செல்கிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. 
தென்னங்குடி கிராம மக்கள் பள்ளி, கோவில், குளம் ஆகிய இடங்களுக்கு செல்ல தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. பணிகள் முடிவடைந்த பின்னர்  நெடுஞ்சாலையை கடந்து செல்வது சிரமம் என்பதால் அங்கு கீழ்ப்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். 
வாகனங்கள் சிறைபிடிப்பு
ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் சர்வீஸ் ரோடு அமைத்து தருவதாகவும், தென்னங்குடி கிராம மக்கள்  ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று சாலையை கடந்து செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறினர். 
இது சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள கிராம மக்கள் சாலையை எளிதாக கடக்க வசதியாக கீழ்ப்பாலம் அமைத்துதர வலியுறுத்தி அங்கு சாலை பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story