மாவட்ட செய்திகள்

11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு + "||" + Assignment of work

11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.
விருதுநகர், 
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது. 
வாக்குச்சாவடி அலுவலர்கள் 
சட்டமன்ற தேர்தலை நடைபெறுவதையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத்தொகுதிகள் மற்றும் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
 இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, நிலை 2, நிலை 3 என மொத்தம் 11 ஆயிரத்து 376 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தநிலையில் கலெக்டர்அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் நேற்று 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி தலைமை நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது 
விருதுநகர் 
 இதில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 149 இடங்களில் 340 மையங்களில் 1,632 சட்டமன்றத் தொகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 138 இடங்களில் 357 வாக்குச்சாவடி மையங்களில் 1,712 அலுவலர்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 153 இடங்களில் 351 வாக்குச்சாவடி மையங்களில் 1,684 அலுவலர்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 89 இடங்களில் 368 வாக்குச்சாவடி மையங்களில் 1,768 அலுவலர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 117 இடங்களில் 325 வாக்குச்சாவடி மையங்களில் 1,560 அலுவலர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 141 இடங்களில் 311 வாக்குச்சாவடி மையங்களில் 1,492 அலுவலர்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 185 இடங்களில் 318 வாக்குச்சாவடி மையங்களில் 1,528 அலுவலர்களும் என மொத்தம் 7   சட்டமன்ற தொகுதிகளில் 968 இடங்களில் 2,370 வாக்குச்சாவடி மையங்களில் 11 ஆயிரத்து 376 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பணி ஒதுக்கீடு
 இவர்கள் அனைவருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணன் தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள் தேவேந்திர குமார் சிங்குஷ்வாகா, பிரபான்ஷுகுமார், வத்ஸவ், பினிதா பெக்கு, சுரேந்திர பிரசாத் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.