பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


பதற்றமான வாக்குச்சாவடிகளில்   தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 25 March 2021 3:29 AM IST (Updated: 25 March 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு ெசய்தார்.

காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு ெசய்தார். 
தீவிர பிரசாரம் 
தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
பதற்றமான வாக்குச்சாவடி 
இந்தநிலையில் காரியாபட்டி யூனியன் ஆவியூர், குரண்டி, கம்பிக்குடி, எஸ்.கல்லுப்பட்டி, கெப்பிலிங்கம்பட்டி மாந்தோப்பு, கீழ அழகிய நல்லூர் ஆகிய கிராமங்களில் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ளன. 
இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் சுரேந்திர பிரசாத் சிங் ஆய்வு செய்தார். அப்போது அவர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.  ஆய்வின் போது காரியாபட்டி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் திருக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story