ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கேமரா உள்பட ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
ஆண்டிமடத்தில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கேமரா உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஆண்டிமடம்:
திருட்டு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் புகைப்பட ஸ்டூடியோ வைத்து நடத்தி வருபவர் ராஜமாணிக்கம். இவர் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கேமரா, மடிக்கணினி உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2-வது முறையாக...
இந்த ஸ்டூடியோவில் கடந்த 2017-ம் ஆண்டு இதே போன்று பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக இந்த ஸ்டூடியோவில் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிமடம் பகுதியில் நள்ளிரவில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story