வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தலைவாசல்:
தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு தினந்தோறும் தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி கவசம்பாடியும், திருப்புகழ் பாடியும் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story