நெசவு நெய்து, சவுராஷ்டிரா மொழியில் பேசி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிஅ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கைத்தறி நெய்து சவுராஷ்டிரா மொழியில் பேசி நெசவுத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று நிலையூர் கைத்தறி நகரில் உள்ள நெசவாளர்களை நேரில் சந்தித்து தனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்.
இந்தநிலையில் கைத்தறியில் அமர்ந்து நெசவாளர்கள் எதிர்பாராதபடி நெசவு நெய்தார். அதைகண்டு நெசவுத் தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த நிலையில் வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ சவுராஷ்டிரா மொழியில் சில வார்த்தைகள் பேசி ஓட்டு கேட்டார். அதை கேட்டு நெசவு தொழிலாளர்கள் மெய் சிலிர்த்தனர்.
அப்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது, ஒரு மனிதனுக்கு தேவை உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம் ஆகிய 3 தேவையையும் நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக அம்மா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நினைப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, பசுமை வீடு திட்டம் மூலம் குடியிருக்க வீடு, விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. நெசவுதொழிலாளர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பை வழங்கும் பொருட்டும் நெசவாளர்களிடமிருந்துவேட்டி சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு தைப்பொங்கலுக்கு ஏழை-எளியவர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாவின் அரசு நெசவாளர்களை காக்கும் அரசாக உள்ளது ஆகவே நெசவாளர்களின் பாதுகாப்பு அரணாக இருக்ககூடிய எடப்பாடியார் மீண்டும் முதல்-அமைச்சராக்க வேண்டும். அதற்காக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த நெசவாளர்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிவாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து மாலையில் விளாச்சேரி, திருநகர், மகாலட்சுமி காலனி, நெல்லையப்பபுரம் சுந்தர் நகர்பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்று மக்களிடையே ஆதரவு திரட்டினார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமான
வரவேற்பு கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கூட்டுறவு வேளாண்மை வாரிய முன்னாள் தலைவர் பூமிபாலன், மாவட்ட துணைச் செயலாளர்முத்துக்குமார்பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர்கள் திருநகர் பாலமுருகன், பொன்முருகன், எம்.ஆர். குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story