அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அவினாசி
அவினாசியில் வரலாறறு சிறப்புமிக்க பெருங்கருணைநாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. தமிழகத்தில் 3 வது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றுள்ள இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால் பக்தர்களும், ஆன்மிக பெரியவர்களும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த ஆண்டு அடுத்த மாதம் ஏப்ரல் 17 ந்தேதி அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கலாம் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் தேர்த்திருவிழா நடைபெற சம்பந்தப்பட்ட துறையினர் அனுமதி அளிப்பார்களா என்ற நிலை உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது தேர்த்திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story