அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று கத்திரிமலை வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்று கத்திரிமலை வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.
அந்தியூர்
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பர்கூர் கத்திரிமலையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 133 வாக்காளர்கள் உள்ளனர்.
கத்திரிமலை பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் தலையிலோ அல்லது கழுதை மேல் வைத்தோ எடுத்துச் செல்ல வேண்டும். வனப்பகுதி என்பதால் அவ்வாறு செல்லும்போது வனவிலங்குகள் தாக்க வாய்ப்புள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் உதவியுடன் வாக்குப்பதிவு எந்்திரத்தை அடர்ந்த வனப்பகுதி வழியாக எவ்வாறு எடுத்து செல்வது என்பது குறித்து பவானி மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த் குமார் மிஷ்ரா, அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ ஆகியோர் கத்திரிமலையில் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த் குமார் மிஷ்ரா வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையொட்டி பர்கூர் தனிப்பிரிவு போலீசார் முருகன், தேவராஜ் ஆகியோர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story