ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட முதியவர்கள் ஆர்வம்- ஒரே வாரத்தில் 4 ஆயிரம் பேர் போட்டுக்கொண்டனர்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட முதியவர்கள் ஆர்வம்- ஒரே வாரத்தில் 4 ஆயிரம் பேர் போட்டுக்கொண்டனர்
x
தினத்தந்தி 25 March 2021 5:16 AM IST (Updated: 25 March 2021 5:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியவர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியவர்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின், கோவிசீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு போடப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலும் 5 அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்பட்டன.
அதன்பிறகு 2-வது கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.
கடந்த 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
முதியவர்கள் ஆர்வம்
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை அதாவது கடந்த 22 நாட்களில் 26 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியவர்கள் பலர் ஆர்வமாக வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக பரவ தொடங்கி இருப்பதால் முதியவர்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்றனர்.

Next Story