பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்; சாத்தூர் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பிரசாரம்
சாத்தூர் வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பிரசாரம்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியான கெங்காபுரம், பேரணாயக்கன்பட்டி, ஆனைக்குட்டம், மேல ஒட்டம்பட்டி, சல்வார்பட்டி, மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம், கனஞ்சாம்பட்டி, மடத்துப்பட்டி உட்பட அனைத்து கிராமங்களிலும் வாக்கு சேகரித்த போது பேசுகையில், பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்.
இப்பகுதியில் தீக்காய சிறப்பு பிரிவுக்கான ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பாடுபடுவேன். பட்டாசு தொழிலாளர்களுக்கு என தனி சிறப்பு நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களிலும் தங்குதடையின்றி குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பேன்.
பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். முதல்&அமைச்சர் எடப்பாடியாரின் நல்ல ஆட்சி தொடர, மக்களுக்கு நல்ல திட்டங்களை மீண்டும் வழங்கிட, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கிடவும், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா வாஷிங்மிஷின் வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆன என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க கழக நிர்வாகிகள், தொண்டர்கள். பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story