மதுக்கூரில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம்
மதுக்கூரில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம் செய்தார்.
என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.அவர் வாட்டாகுடி வடக்கு, ஆதிதிராவிடர் தெரு, விக்ரமம் இடையக்காடு, விக்ரமம் ஈ.பி.காலனி, அக்ரஹாரம், அண்ணாநகர், சிவன் கோவில், சுமைதாங்கி, பாரதிநகர், சிவகொல்லை, இந்திராநகர், இடைக்காடு, மவுலானா தோப்பு, முக்கூட்டு சாலை, மேல சூரியத் தோட்டம், ஆற்றங்கரை தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, கொல்லை தெரு, பஸ் நிலையம், முகமதியர் தெரு, நூருல் இஸ்லாம் தெரு, பள்ளிவாசல் தெரு, புது தெரு, ஆஸ்பத்திரி ரோடு, ராமம்பாள்புரம், முருகன் கோவில் தெரு, படைப்பைகாடு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
தரம் உயர்த்தப்படும்
அப்போது வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் பேசியதாவது:-
மதுக்கூர் பகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்கப்படும். மற்றும் தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். அம்மா மினி கிளினிக் அதிக அளவில் அமைக்கப்படும். மதுக்கூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளருடன் த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், சி.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மலை அய்யன், மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் துரை.செந்தில், தண்டபாணி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகராஜன், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் முத்துராமலிங்கம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் முரளி கணேஷ், வரதராஜன், அன்பரசன் மற்றும் த.மா.கா. சார்பில் ரவிச்சந்திரன், புஷ்பநாதன், புகழேந்தி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story