செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சாமி கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் உள்ள மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி விநாயகர் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அரசமர விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதனை தொடர்ந்து நாடிசந்தானம், ஸ்பர்ஸா ஹீதி, மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், தடம் புறப்பாடு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி அம்மன் ஆகிய மூல மூர்த்திகளுக்கும், வள்ளி தேவசேனா ஸமேத மந்திரகிரி வேலாயுத சாமிக்கு கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.
பின்னர் அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
விழாவில், சூலூர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., கோவை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் விஜயலட்சுமி, அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story