திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அலுவலர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அலுவலர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 25 March 2021 5:40 PM IST (Updated: 25 March 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அலுவலர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அக தர மதிப்பீட்டு குழுவின் சார்பில், ‘பணி நெறிமுறைகள் மற்றும் மானுட மதிப்பீடுகள்’ என்ற தலைப்பில் அலுவலர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலு வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
வ.உ.சி. கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், நம்மை பாதிக்கக்கூடிய காரணிகள் என்ன?, அவற்றில் இருந்து மீண்டு வருவது எப்படி? என்பது குறித்து விளக்கி கூறினார். பேராசிரியர்கள் கார்த்திகேயன், வேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் மருதையா பாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அக தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா செய்து இருந்தார்.

Next Story