பேரணாம்பட்டு; ரூ.3½ லட்சம் செல்போன்கள் பறிமுதல்


பேரணாம்பட்டு; ரூ.3½ லட்சம் செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2021 8:15 PM IST (Updated: 25 March 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டை அடுத்த உமராபாத் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பேரணாம்பட்டு டவுன் ரஷீதாபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் முபீன் (வயது 28) என்பதும், உரிய ஆவணமின்றி ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 120 செல்போன்கள் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. 

இதனையடுத்து அதிகாரிகள் 120 செல்போன்களை பறிமுதல் செய்து, பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.

Next Story