செங்கல்பட்டு மாவட்டத்தில் 699 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 699 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் காவல் துறை பார்வையாளர் முன்னிலையில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜான் லூயிஸ் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடந்தது.
இதில் கலெக்டர் ஜான் லூயிஸ் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 699 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன. மேற்படி வாக்குச்சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கூடுதலாக மத்திய காவல் படை, கண்காணிப்பு கேமரா, முன் பார்வையாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். பொதுமக்கள் எந்த வித அச்சமும் இன்றி தங்களது வாக்குகளை பதிவிட தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் காவல்துறையின் அணிவகுப்பு நடத்தவும் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story