பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
பழனி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.1½ லட்சத்தை தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பழனி:
பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மடத்துக்குளத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரான பிரவீன்பாபுவை(வயது 40) அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார்சைக்கிளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 660 இருந்தது.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story