கோத்தகிரி பகுதியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்


கோத்தகிரி பகுதியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2021 10:33 PM IST (Updated: 25 March 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோத்தகிரி,

தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம்  சாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் நேரு மகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி ஊட்டி கீழ் கோடப்பமந்துவை சேர்ந்த ஜெயராம் என்பவர் ரூ.52 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும் அந்த வழியாக வந்த குன்னூர் எடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தீப் மேனன் என்பவர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.50 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் நேற்று முன் தினம் இரவு, பறக்கும் படை அலுவலர் முபாரக் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி அரவேனு கேசலாடாவை சேர்ந்த பிரவீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.68 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. 

கோத்தகிரி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்தை பறக்கும் படை அதகாரிகள் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story