திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2021 10:53 PM IST (Updated: 25 March 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தபோவனம் என்ற இடத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளர் அன்பழகன் தலைமையிலான தேர்தல்பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடலூரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் வந்த கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தாண்டவராயன் மகன் ராஜாராம் என்பவர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

Next Story