ஒரே நாளில் 3 கிலோ தங்கம் ரூ41 லட்சம் பறிமுதல்


ஒரே நாளில் 3 கிலோ தங்கம் ரூ41 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2021 11:14 PM IST (Updated: 25 March 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கிலோ தங்கம் மற்றும் ரூ.41 லட்சம் பணம் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை,

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கிலோ தங்கம் மற்றும் ரூ.41 லட்சம் பணம் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் சோதனை 

தேர்தல் நெருங்கி வருவதால் கோவையில் பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் தினமும் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகள் பிடிபடுகின்றன. 

இந்த நிலையில் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை பொறுப்பு அதிகாரி சம்பத்குமார் தலைமையில் அதிகாரிகள் நஞ்சுண்டாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினார்கள். 

3 கிலோ தங்கம் பறிமுதல்

இதில் அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.1.கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 159 கிராம் தங்க நகைகள் இருந்தன. 

இதுகுறித்து அந்த வேனில் வந்த கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 22) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதற்கு அவர், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு நகைக் கடைக்கு கொண்டு செல்வதாக கூறினார். 

பாலக்காடு செல்வதற்கு ஏன் கோவை நகருக்குள் வந்தார்கள் என்ற கேள்விக்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. 

மேலும் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் வைக்கப் பட்டன.

ஏ.டி.எம்.மிற்கு கொண்டு செல்லப்பட்ட பணம்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் முன்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. 

இதே போல கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. முன்பு நடத்தப்பட்ட வாகன சோதனையில் வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

அந்த பணத்துக்கும் போதிய ஆவணங்கள் இல்லை என்று தெரிய வந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரே தொகுதி 

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட நிலை கண்காணிப்பு குழு பொறுப்பு அதிகாரி பிரமிளா தலைமையில் அதிகாரிகள் உடையாம் பாளையம்-சவுரிபாளையம் சாலையில் வாகன சோதனை நடத்தினார்கள்.

 அப்போது உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து ஆயிரம் எடுத்துச் சென்ற கிருஷ்ணன் என்பவர் சிக்கினார். இதைத் தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை பொறுப்பு அதிகாரி சாமிநாதன் தலைமையில் அதிகாரிகள் ராம்நகர் சாஸ்திரி சாலையில் சோதனை நடத்தியபோது பிரபு (37) என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதன் மூலம் கோவையில்  ஒரே நாளில் ஒரே தொகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கிலோ தங்க நகைகள், ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story