திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருடசேவை
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருடசேவை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் காலை இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், இரவு கருட சேவையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று காலை திருமஞ்சனமும் மாலையில் சந்திர பிரபை நிகழ்ச்சியும் இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் 7-வது நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்க பல்லக்கு உற்சவமும் மாலையில் திருக்கல்யாணமும் இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நாளை(சனிக்கிழமை) காலை தந்தப் பல்லக்கும், மாலை குதிரை வாகனமும் வேடுபறி உற்சவமும் நடக்கிறது. 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேர் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து மாலை சாமிக்கு தீர்த்தவாரி மற்றும் சாற்றுமறை நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் மேற்பார்வையில் தேவஸ்தான ஏஜெண்ட் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமையில் விழாக் குழுவினர், உபயதாரர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story