தர்மபுரி, கிருஷ்ணகிரி் மாவட்டங்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தர்மபுரி,
தமிழகத்தில் கடந்த ஜனவரி 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருந்தனர். அதில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேரும், பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 391 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். அதனடிப்படையில் தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது.
தர்மபுரி
தற்போது 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் இந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும், பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,192 பேரும் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கையின் விவரம் வருமாறு:-
பாலக்ேகாடு-1,19,828 (ஆண்கள்), 1,16,997 (பெண்கள்), 18 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,36,843.
பென்னாகரம்-1,27,575 (ஆண்கள்), 1,18,950 (பெண்கள்), 10 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,46,535.
தர்மபுரி- 1,35,889 (ஆண்கள்), 1,33,539 (பெண்கள்), 109 (மூன்றாம் பாலினம்), ெமாத்தம் 2,69,537.
பாப்பிரெட்டிப்பட்டி- 1,32,778 (ஆண்கள்), 1,32,287 (பெண்கள்), 9 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,65,074.
அரூர்- 1,25,105 (ஆண்கள்), 1,24,691 (பெண்கள்), 13 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,49,809.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை- 1,19,361 (ஆண்கள்), 1,18,393 (பெண்கள்), 56 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,37,810.
பர்கூர்- 1,22,222 (ஆண்கள்), 1,24,826 (பெண்கள்), 16 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,47,064. கிருஷ்ணகிரி- 1,30,541 (ஆண்கள்), 1,35,588 (பெண்கள்), 38 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,66,167.
வேப்பனப்பள்ளி- 1,27,960 (ஆண்கள்), 1,23,353 (பெண்கள்), 33 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,51,346.
ஓசூர்- 1,79,466 (ஆண்கள்), 1,72,149 (பெண்கள்), 100 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 3,51,715. தளி- 1,28,931 (ஆண்கள்), 1,22,214 (பெண்கள்) 33 (மூன்றாம் பாலினம்), மொத்தம் 2,51,178.
Related Tags :
Next Story