குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள்-அரசில் கட்சி பிரமுகர்கள் தர்ணா
அடைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறக்ககோரி குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள்-அரசில் கட்சி பிரமுகர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை
புறவழிச்சாலை
குளித்தலை உழவர்சந்தை ரெயில்வே கேட் செல்லும் புறவழிச்சாலையின் நடுவில் உள்ள ஒரு பகுதி தனிநபரின் ஒருவருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இறுதியில் அந்த தனிநபருக்கு சொந்தமான இடம் நீதிமன்றம் மூலம் அவருக்கு சுவாதீனம் எடுத்து கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு சொந்தமான இடத்தில் வேலி போடப்பட்டு பாதை அடைக்கப்பட்டது.
இதனால் குளித்தலை நகர, குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
தர்ணா போராட்டம்
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை அடைக்கப்பட்டுள்ளது. அடைக்கப்பட்ட தனிநபருக்கு சொந்தமான இடத்தை உரிய தொகை அளித்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று குளித்தலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்ணாவில் இருந்தவர்கள் கூறுகையில், குளித்தலை பகுதியில் உள்ள அடைக்கப்பட்ட புறவழிச்சாலை பகுதியை ஏற்கனவே அடைக்கப்படாமல் இருந்த காலத்தில் எவ்வாறு பயன்படுத்தி வந்தார்களோ அதேபோலவே பயன்படுத்தி கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் மூலம் ஆணை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அடைக்கப்பட்ட பாதையை உடனடியாக திறக்க வேண்டுமென தெரிவித்தனர்.
இரண்டு நாட்களுக்குள் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story