பூம்புகார் மீனவர்களுக்கு சமுதாய கட்டுப்பாடு விதிக்கப்படும்


பூம்புகார் மீனவர்களுக்கு சமுதாய கட்டுப்பாடு விதிக்கப்படும்
x
தினத்தந்தி 26 March 2021 12:39 AM IST (Updated: 26 March 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு எதிராக சுருக்கு மடி வலை பயன்படுத்தும் பூம்புகார் மீனவர்களுக்கு சமுதய கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பொறையாறு:
அரசுக்கு எதிராக சுருக்கு மடி வலை பயன்படுத்தும் பூம்புகார் மீனவர்களுக்கு சமுதாய கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம் 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த 20 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் புறக்கணிப்பு கிடையாது 
1983-ம்ஆண்டு அரசாணையை உடனே அமல்படுத்தி மத்திய, மாநில அரசுகள் தடைசெய்யப்பட்ட சுரக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட மோட்டார் எஞ்சின் பொருத்தப்பட்ட விசைபடகுகளுக்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
 அரசின் ஆணையை மதித்து நமது மீனவர்களின் நலனில் மேம்பாடு உள்ளதால் அரசு ஆணையை முழுமையாக ஏற்றுக் கொள்வது எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருசில கிராமங்களை தவிர அனைத்து கிராமங்களிலும் தேர்தல் புறக்கணிப்பு என்பது கிடையாது எனவும் அனைத்து கிராம மக்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு மற்றும் நம் சமுதாயத்தால் தடைசெய்யப்பட்ட தொழில்களை மீறி செய்யும் பட்சத்தில் அனைத்து கிராமங்களும் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்வது எனவும், தொடர்ந்து சுருக்குமடி, இரட்டை மடி வலையை பயன்படுத்தும் பூம்புகார் மீனவர்களை கண்டிப்பதுடன் அவர்களுக்கு சமுதாய கட்டுப்பாடு விதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
20 மீனவ சிராம பஞ்சாயத்தார்கள் 
கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, சந்திரபாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், சாவடிக்குப்பம், மேலமூவர்க்கரை, கீழமுவர்க்கரை, தொடுவாய், சின்னக் கொட்டாய்மேடு, பழையாறு, தார்காஸ், கொடியன்பாளையம் ஆகிய 20 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

Next Story