குழித்துறையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம்; தொகுதி வளர்ச்சிக்காக உங்களுடன் சேர்ந்து உழைப்பேன் - சாமுவேல் ஜார்ஜ் வாக்குறுதி


குழித்துறையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம்; தொகுதி வளர்ச்சிக்காக உங்களுடன் சேர்ந்து உழைப்பேன் - சாமுவேல் ஜார்ஜ் வாக்குறுதி
x
தினத்தந்தி 26 March 2021 1:15 AM IST (Updated: 26 March 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

விளவங்கோடு தொகுதி சுயேட்சை வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் குழித்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, தொகுதி வளர்ச்சிக்காக உங்களுடன் சேர்ந்து உழைப்பேன் என பேசினார்.

களியக்காவிளை, 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் போட்டியிடுகிறார். இவருக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் குழித்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பெருவாரியாக இங்கு வந்துள்ளீர்கள். என் மீது நம்பிக்கை வைத்து இங்கே வந்துள்ள அனைவருக்கும் கோடான கோடி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.விளவங்கோடு தொகுதி வளர்ச்சிக்காக என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுடன் இருந்து உழைப்பேன். இதற்கு அனைவரும் கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், வேட்பாளரின் ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story