கல்லூரி மாணவர், ஏரியில் மூழ்கி பலி
நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கீழப்பழுவூர்:
ஏரியில் மூழ்கினார்
அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவருடைய மகன் புகழேந்தி(வயது 19). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஓட்டகோவில் கிராமத்தில் உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சலடிக்க முடியாமல் நீருக்குள் மூழ்கி உள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
பிணமாக மீட்பு
இது பற்றி அரியலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஏரியில் இறங்கி ேதடினர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் புகழேந்தியை பிணமாக மீட்டனர்.
இதையடுத்து தூத்தூர் போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story