வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை-பணம் திருட்டு
அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை-பணம் திருடப்பட்டது.
அறந்தாங்கி
அறந்தாங்கி எல்.என்.புரம் நவரெத்தினநகரை சேர்ந்தவர் போஸ் (வயது 48). விவசாயம் செய்து வருகிறார். இவர் அறந்தாங்கி அருகே உள்ள குறிஞ்சிவயல் கிராமத்தில் அவருக்கு சொந்தமான வயலில் நெல்கதிர் அறுவடை செய்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க சங்கிலிகள், தோடு, தங்க காசு உள்பட 16 பவுன் நகை மற்றும் ரூ.54 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story