8 சட்டமன்ற தொகுதிகளுக்கு நோய் பரவல் தடுப்பு பொருட்கள் அனுப்பி வைப்பு
8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நோய் பரவல் தடுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு
8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நோய் பரவல் தடுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
முக கவசம் கட்டாயம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுவதால், நோய் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலின்போது வாக்காளர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதேபோல் வாக்காளர்களுக்கு தலா ஒரு கையுறை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேவையான நோய் பரவல் தடுப்பு பொருட்களையும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்தது.
கிருமி நாசினி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19 லட்சத்து 57 ஆயிரத்து 481 வாக்காளர்களுக்கு கையுறைகள், தேர்தல் பணியில் ஈடுபடும் 13 ஆயிரத்து 160 பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள், கிருமி நாசினி ஆகிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் வாக்குச்சாவடிகளுக்கு வினியோகம் செய்யும் வகையில் தனித்தனியாக பெட்டிகளில் அடுக்கி வைத்து வாகனங்கள் மூலமாக 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story