62 செல்போன்கள் பறிமுதல்
மூலைக்கரைப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 62 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாங்குநேரி, மார்ச்:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி முத்துசெல்வி (கூட்டுறவு சார் பதிவாளர்) தலைமையில் மூலைக்கரைப்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி நோக்கி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சந்திரன் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அவரது மோட்டார் சைக்கிளில் 62 செல்போன்கள் மற்றும் 165 செல்போன் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லை. எனவே இவற்றை பறிமுதல் செய்து நாங்குநேரி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.88 ஆயிரம் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story