விராலிமலை அம்மன், முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.10¼ லட்சம்
விராலிமலை முருகன், அம்மான் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
விராலிமலை
விராலிமலை மெக்கண்ணுடையாள் அம்மன் மற்றும் முருகன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இப்பணியானது உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் பாரதிராஜா தலைமையிலும் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. காணிக்கைகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், அம்மன் கோவிலில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 867-ம், 4 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி 48 கிராமும் இருந்தது. இதேபோல் முருகன் கோவிலில் ரூ.8 லட்சத்து 85 ஆயிரத்து 182-ம், 20 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி 478 கிராமும் இருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, திருச்சி அல்லித்துறை அம்மன் குழுவினர், விராலிமலை மகளிர் குழுவினர், பக்தர்கள், கும்பாபிசேக குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story