வாடிப்பட்டிபகுதியில் சாலை, வடிகால், குடிநீர்வசதிகள் தன்னிறைவு செய்த பணிகளே சாட்சி சொல்லும் - அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் பேச்சு


வாடிப்பட்டிபகுதியில் சாலை, வடிகால், குடிநீர்வசதிகள் தன்னிறைவு செய்த பணிகளே சாட்சி சொல்லும் - அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2021 3:02 AM IST (Updated: 26 March 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி பகுதியில் சாலை, வடிகால், குடிநீர் வசதிகள் தன்னிறைவு பெற்றுள்ளது அதற்கு செய்தபணிகளே சாட்சிசொல்லும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மாணிக்கம் எம்.எல்.ஏ., பேசினார்.

மதுரை,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

நேற்று முழுவதும் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் வாக்குசேகரித்தார். அவருக்கு வார்டுகள் தோறும் பெண்கள் ஆர்வத்துடன் கைக்குழந்தைகளுடன் வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அதன்பின் திறந்த ஜீப்பில் நின்றபடி வேட்பாளர் மாணிக்கம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகளிலும் சாலைகள் விரிவுபடுத்தியும் சுகாதாரத்துடன்மூடிபோடப்பட்ட வடிகால்அமைத்தும், 40லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரமானகுடிநீர் என்று அடிப்படைவசதிகளில் தன்னிறைவுபெற செய்துள்ளேன். நான்செய்த அந்த பணிகளே சாட்சிசொல்லும். வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் ரூ.3கோடிமதிப்பீட்டில் மாடியுடன்கூடிய வணிகவளாகங்கள், நவீனசுகாதாரவளாகம், ஒருங்கிணைந்தநீதிமன்ற கட்டிடம், ஆர்.டி.ஒ.,அலுவலகம், பத்திரபதிவுஅலுவலகம், அரசுமருத்துவமணையில் சுத்திகரிக்கப்பட்டகுடிநீர், டயாலிசிஸ்சென்டர், தீயணைப்பு நிலையம் என்று பணிகளை பட்டியலிடலாம்.

சாமானியர்களின் முதல்வர் எடப்பாடியார் கூட்டுறவுவங்கி பயிர் கடன்மட்டுமல்லாமல் மகளிர்சுயஉதவிக்கடன்களையும் தள்ளுபடி செய்;துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதுபோல் ஆட்சிக்குவந்தால் வீட்டுக்கு ஒரு வாசிங்மிஷன், ஆண்டுக்கு 6 விலையில்லாசிலிண்டர், குடும்பதலைவிக்கு ரூ.1,500, 200யூனிட் இலவசமின்சாரம், அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசுவேலை என்று அனைத்தையும் நிறைவேற்றுவோம் அதனால் இரட்டைஇலையில் வாக்களித்து என்னை வெற்றிபெறசெய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார். உடன் முன்னாள்பேரூராட்சிதுணைத்தலைவர் சோனை, கூட்டுறவுசங்கதலைவர்கள் வழக்கறிஞர் கார்த்திக், உங்குசாமி, துணைத்தலைவர் டாக்டர் அசோக்குமார், பேரூர்துணைசெயலாளர் சந்தனதுரை, பேரூர்பேரவைசெயலாளர் தனசேகரன், பேரூர்மன்றசெயலாளர் முத்துகண்ணன், பாரதியஜனதா கட்சி நிர்வாகிகள் முரளிராமசாமி, முத்துராமன், உள்பட கூட்டணிகட்சிநிர்வாகிகள் உடன் வந்தனர்.


Next Story