அரசின் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்க உறுதுணையாக இருப்பேன் - அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி பிரச்சாரம்


அரசின் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்க உறுதுணையாக இருப்பேன் - அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி பிரச்சாரம்
x
தினத்தந்தி 26 March 2021 3:23 AM IST (Updated: 26 March 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

அரசின் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்க உறுதுணையாக இருப்பேன் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி பிரச்சாரம் செய்தார்.

காரைக்குடி,

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வி.பாண்டிதேவகோட்டை, சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 

கண்மாய் பாசனம் உள்ள அனைத்து கிராமங்களிலும் இலவச ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்து விவசாயிகளின் நலன் காப்போம். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மித்ராவயல் பகுதியில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. அதனை மீண்டும் நவீன வசதிகளுடன் செயல்பட வைப்பேன். 

வேலை வாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று அவதிப்படும் இளைஞர்களுக்காக உள்ளூரிலேயே தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சாக்கோட்டை கண்ணங்குடி பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.விரிவடைந்து வரும் காரைக்குடி வடக்கு விரிவாக்கப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். 

தேவகோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்ஊருக்கு வெளியே குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படும் நகரின்குப்பைகளை உரமாக மாற்ற ஏற்பாடு செய்யப்படும். மணிமுத்தாறு பாலத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.புதுவயல் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். குளிர்சாதன வசதியுடன் கூடிய காய்கறி சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

காரைக்குடி குடிநீர் ஆதாரமானசம்பை ஊற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் எதிரே புராதான சின்னமாக உள்ள மணிக்கூண்டு சீரமைக்கப்பட்டு மீண்டும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசின் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் நலன் காக்க உறுதுணையாக இருப்பேன். ஓய்வூதியர்கள் நலனுக்காக பாடுபடுவேன்.அதிமுக நண்பர்களே நான் அங்கு இருந்த போது எப்படி கண்ணியமாக நாகரீகமாக அரசியல் செய்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

அதனை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.திமுக தோழர்களேதொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தப்படாதீர்கள் உங்களது விருப்பங்களை நிறைவேற்ற நான்இருக்கிறேன் .எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்என்பதில் உண்மையோடும் உறுதியோடும் செயல்படுவேன். 

இவ்வாறு பேசினார்.

Next Story