வாங்கிய கடனுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றியவருக்கு 2 ஆண்டு சிறை


வாங்கிய கடனுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றியவருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 March 2021 3:23 AM IST (Updated: 26 March 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

வாங்கிய கடனுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகிரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிவகிரி, மார்ச்:
சிவகிரி கீழ ரதவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் சிவகிரி குமாரபுரம் 18-வது வார்டு மேலத்தெருவை சேர்ந்த அர்ஜூனன் மகன் மாரியப்பன் என்பவரிடம் கடந்த 2.11.2016 அன்று குடும்ப செலவுக்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய வகைக்காக 7.4.2017 அன்று ரூ.10 லட்சத்துக்கு ஒரு வங்கி பெயரில் காசோலை ஒன்றை கணேசன், மாரியப்பனிடம் வழங்கியுள்ளார். குறிப்பிட்ட நாட்கள் கழித்து அந்த வங்கியில் மாரியப்பன் காசோலையை கொடுத்து பணம் கேட்டபோது பணம் இல்லை என பதில் கிடைத்தது. இது சம்பந்தமாக கணேசனிடம் பலமுறை தெரிவித்தும் அவர் சரியான பதில் கூறவில்லை. இதையடுத்து கடந்த 3.7.2017 அன்று சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாரியப்பன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிரியங்கா விசாரணை நடத்தி போலியாக காசோலை கொடுத்து ஏமாற்றிய குற்றத்திற்காக கணேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், மேலும் ரூ.20 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.

Next Story