படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வேன் - பாஜக வேட்பாளர் பாண்டு ரங்கன் உறுதி


படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வேன் - பாஜக வேட்பாளர் பாண்டு ரங்கன் உறுதி
x
தினத்தந்தி 26 March 2021 3:33 AM IST (Updated: 26 March 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்வேன் என பாஜக வேட்பாளர் பாண்டு ரங்கன் உறுதி அளித்தார்.

விருதுநகர் ,

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் நகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து அவர் நகரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

இதனை தொடர்ந்து வீரச்மாசெல்லையாபுரம் ரகுமாரலிங்கபுரம் ஆமத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராம மக்களை சந்தித்து அவர் கிராமங்களில் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய உங்களில் ஒருவனாக உழைப்பேன் என உறுதிபட தெரிவித்தார். 

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜசேகர் உள்ளிட் டோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து வேட்பாளர் பாண்டுரங்கன் தெரிவித்த தாவது கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை இருந்து வருகிறது. படித்த இளைஞர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள போட்டித்தேர்வு மையம் முறையாக செயல்படாத நிலை உள்ளது. எனவே போட்டித் தேர்வு மையம் முறையாக செயல்படவும் அதன் மூலம் படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறவும் தேவையான ஏற்பாடுகள் செய்வேன்.

மேலும் விருதுநகரில் சீரான இடைவெளியில் தனியார் நிறுவனங்களை அழைத்து வந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்களுக்கு அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். படித்த இளைஞர்கள் பலர் தொழில் முனைவோராக ஆவதற்கு விருப்பம் இருந்த போதிலும் அவர்களால் பல்வேறு காரணங்களால் அதனை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே தொழில் முனைவோராக உள்ள நான் இது குறித்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். விருதுநகரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த சிப்காட் தொழில் பூங்கா இன்னும் பயன் பாட்டிற்கு வராத நிலை உள்ளது. இதனை விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தொழில் தொடங்க விரும்பும் பலர் தொழில் தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

கிராமப்புற விவசாயிகள் தற்போது உள்ள நிலையில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு படைபுழு தாக்குதல் தொடர்மழை ஆகிய வற்றால் பயிர்ச்சேதம் ஏற்பட்டு மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே வருங்காலங்களில் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க தேவையான உதவிகள் செய்வேன். மேலும் விளை பொருட்களைநல்ல விலைக்கு விற்பதற்கு விருதுநகர் வேளாண் விற்பனைக்கூடம் மூலம் உரிய ஆலோசனைகளை வழங்கி அவர்கள் லாபத்துடன் விளை பொருள்களை விற்பதற்கு நட வடிக்கை எடுப்பேன். மொத்தத்தில் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விருதுநகர் தொகுதி விவசாயிகள் விவசாயம் மூலம் லாபம் அடையவும் தொழில் முனைவோர் தொழில் தொடங்கி பலன் பெறவும் மத்திய மாநில அரசுகளின் உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும் நலிவடைந்த தொழில்களை புனரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பிரச்சாரத்தின் போது கோவிந்த நல்லூரைச் சேர்ந்த காவியா என்ற பெண் தான் படித்திருந்தும் வேலை இல்லாமல் தவிப்பதாக வேட்பாளர் பாண்டுரங்கனிடம் தெரிவித்தார். அவர் உடன டியாக அப்பகுதிக்கு தனது தொழில் நிறுவனத்தில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்கு வதாக உறுதி அளித்தார். வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு இளம்பெண் காவியாவும் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.

Next Story