தேர்தல் பணிக்கு வந்த வீரர் தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு படை இயக்குனர் நேரில் விசாரணை


தேர்தல் பணிக்கு வந்த வீரர் தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு படை இயக்குனர்  நேரில் விசாரணை
x
தினத்தந்தி 26 March 2021 4:11 AM IST (Updated: 26 March 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தேர்தல் பணிக்கு வந்த வீரர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பாதுகாப்பு படை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தினார்.

சேலம்:
சேலத்தில் தேர்தல் பணிக்கு வந்த வீரர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பாதுகாப்பு படை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தினார்.
தற்கொலைக்கு முயற்சி
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலம் வந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அன்னதானப்பட்டியில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில் தங்கி உள்ளனர்.
இவர்களில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசெஷ்குமார் பூட்டியா (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் துப்பாக்கியால் தனது கழுத்தில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை அங்கிருந்த சக வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதுகாப்பு படை இயக்குனர் விசாரணை
ஆசெஷ்குமார் பூட்டியாவின் தொண்டையை துளைத்து கொண்டு மூக்கின் வழியாக குண்டு வந்தததால் அந்த பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்த பகுதி சரி செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் சஞ்சனா சின்கா ஐதராபாத்தில் இருந்து நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதுகாப்பு படை வீரர் ஆசெஷ்குமார் பூட்டியாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். 
இதையடுத்து பாதுகாப்பு படை இயக்குனர் சஞ்சனா சின்கா போலீஸ் சமுதாய கூடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருமணம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணயில், ஆசெஷ்குமார் பூட்டியாவிற்கு திருமணம் செய்ய அவரது வீட்டார் பெண் பார்த்துள்ளனர். ஆனால் அந்த பெண் அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையில் இருந்த ஆசெஷ்குமார் பூட்டியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story