வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் தீக்காய சிகிச்சை சிறப்பு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன் - சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன்


வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் தீக்காய சிகிச்சை சிறப்பு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன் - சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன்
x
தினத்தந்தி 26 March 2021 4:13 AM IST (Updated: 26 March 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதியில் தீக்காய சிகிச்சை சிறப்பு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன் என சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சாத்தூர்,

சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு சாத்தூர் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பகுதியான அப்பநாயக்கன்பட்டி, அக்கரைபட்டி, மேலாண்மறைநாடு, வலையபட்டி, கோவிலூர், அருணாசலபுரம், கண்மாய்பட்டி, ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, குருஞ்செவல், செவல்பட்டி, கொட்டமடக்கிபட்டி, அலமேலுமங்கையாபுரம், துலுக்கன்குறிச்சி, கண்டியாபுரம், முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, பாறைபட்டி உள்பட அனைத்து கிராமங்களில் வாக்கு சேகரித்த போது பேசுகையில், 

பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதியில் தீக்காய சிகிச்சை சிறப்பு மருத்துவமனை அமைக்கவும்,பட்டாசு தொழிலாளர்களுக்கு என தனி சிறப்பு நல வாரியம் அமைக்கவும் முயற்சி செய்வேன். அனைத்து கிராமங்களிலும் தங்குதடையின்றி குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பேன். மேலும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவேன். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நல்ல ஆட்சி தொடர, மக்களுக்கு நல்ல திட்டங்களை மீண்டும் வழங்கிட, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 கிடைக்கவும், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா வாஷிங்மிஷன் வழங்கிடவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆன என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார். செல்லும் கிராமபுற பகுதிகள் எங்கும் பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். 

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு. கழக நிர்வாகிகள், தொண்டர்கள். பாரதியா ஜனதா கட்சி ,தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story