கருப்பூரில் முககவசம் அணியாத 75 பேர் மீது வழக்கு


கருப்பூரில் முககவசம் அணியாத 75 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 March 2021 4:29 AM IST (Updated: 26 March 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

கருப்பூரில் முககவசம் அணியாத 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கருப்பூர்:
கருப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கருப்பூர் பேரூராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் இணைந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிலையில் கருப்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பொற்கொடி மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத 75 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Next Story