சேலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
சேலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி பலி
சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி அரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). பி.காம் படித்துள்ள இவர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ரமேஷ் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார்.
பின்னர் அவர் அங்கு கீழே விழுந்து கிடந்த தென்னை மட்டையை எடுக்க முயன்றார். அப்போது ஏற்கனவே அறுந்து கிடந்த மின்சார வயர் மீது அவருடைய கைகள் தெரியாமல் பட்டன. இதனால் ரமேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரமேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story