தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டவுன் பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்; கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி பேச்சு


கரூர் செங்குந்தபுரம் பகுதியில் வி.செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தபோது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றபோது
x
கரூர் செங்குந்தபுரம் பகுதியில் வி.செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தபோது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றபோது
தினத்தந்தி 26 March 2021 1:15 AM GMT (Updated: 26 March 2021 1:20 AM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டவுன் பஸ்சில் பெண்கள் இல வசமாக பயணிக்கலாம் என வி.செந்தில்பாலாஜி கூறினார்.

வாக்கு சேகரிப்பு
கரூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் மத்திய மேற்கு நகரம் மற்றும் கரூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் வீடு, வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

டவுன் பஸ்சில் இலவசம்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் தினமும் வேலைக்கு பஸ்சில் பயணம் செய்கின்றனர். இதனால் அவர்கள் வாங்கும் சம்பளம் பெரும்பகுதி பஸ் கட்டணத்திற்கே செலவாகிறது. இதனை கருத்தில் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் டவுன் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். இதன்மூலம் பெரும் தொகை பெண்களுக்கு மிச்சமாகும். மேலும் திரு நங்கைகள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். கட்டிட தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக் அனைவருக்கும் பழுது நீக்கும் உபகரணங்கள் இல வசமாக வழங்கப்படும். உங் களில் ஒருவனாக நினைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story