மணிகண்டம் தெற்கு ஒன்றியம், பாகனூர் ஆரோக்கியமாதா ஆலயத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பிரார்த்தனை


மணிகண்டம் தெற்கு ஒன்றியம், பாகனூர் ஆரோக்கியமாதா ஆலயத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்  கு.ப.கிருஷ்ணன் பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 March 2021 7:15 AM IST (Updated: 26 March 2021 7:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.முக. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.முக. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன்  மணிகண்டம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான பாகனூரில் உள்ள ஆரோக்கியமாதா ஆலயத்தில்  மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி பிரார்த்தனை செய்தார்.  பின்னர் ஆலய பங்குத்தந்தையிடம் ஆசி பெற்று ஆலயத்தில்  வந்திருந்த  பொதுமக்களிடம்   இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.  

உடன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், பொறுப்பாளர்கள் ஜெயராஜ், சேவியர் பொன்செல்வராஜ், பெரியசாமி, கணேசன், மணிகண்டன் மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க. தொண்டர்கள் உடன் சென்றனர்.

Next Story