தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர்ந்திட என்னை வெற்றி பெற செய்யுங்கள்; பூம்புகார் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பவுன்ராஜ் வேண்டுகோள்
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர்ந்திட என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று பூம்புகார் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பின்போது வேண்டுகோள் விடுத்தார்.
வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் போட்டியிடுகிறார். அவர் செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் காளகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, செம்பனார்கோவில், பரசலூர், தொழுதலாங்குடி, கீழையூர், மேக்கிரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். செம்பனார் கோவில் அருகே திருச்சம்பள்ளி கிராமத்தில் வாக்குசேகரித்த போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பொற்கால ஆட்சி தொடர்ந்திட...
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் குடும்பதலைவிக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும். வாஷிங்மிஷின், மாதம் ரூ.1,500 வழங்கப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க கூடுதல் மானியம் வழங்கப்படும். நான் கடந்த 10 ஆண்டுகளில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
முன்னதாக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தில் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர், வேட்பாளர் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்று, அவர்களிடம் ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ. விஜயபாலன், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story