மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தருவேன்; பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி
மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தருவேன் என்று பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி அளித்தார்.
என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தளிக்கோட்டை தெற்கு பகுதியில் இருந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். தளிக்கோட்டை வடக்கு, ஆலந்தூர் சின்னவாடி, ஆலத்தூர் மேலத்தெரு, ஆலத்தூர் மெயின் ரோடு, ஆலந்தூர் வடக்கு தெரு, ஆலத்தூர் அம்பேத்கர் நகர், ஆலத்தூர் முசிறி, கருப்பூர் மேற்கு, கருப்பூர் கிழக்கு, ஆதிதிராவிடர் நகர், புலவஞ்சி ஆதி தெரு, புலவஞ்சி மேற்கு, புலவஞ்சி கிழக்கு, அண்டமி சிவன் கோவில் தெரு, அண்டமி ஆதி தெரு, கீழக்குறிச்சி ஆதி தெரு, முருகன் கோவில் தெரு, முத்திரையர் தெரு, யாதவர் தெரு, நெம்மேலி ஆதி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, வடக்கு தெரு, ஆவிக்கோட்டை மெயின் ரோடு, மெய்க்க விநாயகர், ஆதி திராவிடர் தெரு, ஓலைய குன்னம், மண்டலக்கோட்டை முத்திரையர் தெரு, மண்டலக்கோட்டை சர்ச், ஓலைய குன்னம் கீழ தெரு, ஓலைய குன்னம் ஆதிதிராவிடர் தெரு, பாலாஜி கோட்டை, வள்ளுவர் சிலை ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
தீயணைப்பு நிலையம்
அப்போது அங்கு திரண்டு இருந்த இஸ்லாமிய மக்களும், பொதுமக்களும் என்.ஆர்.ரெங்கராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் கூறுகையில், மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தார்.வேட்பாளருடன் சி.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மலைஅய்யன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், தண்டபாணி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் அலெக்ஸ், ராகவன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகராஜன், த.மா.கா. சார்பில் புகழேந்தி, புஷ்பநாதன், ரவிச்சந்திரன், அத்தி.செந்தில், சோ.பாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story