ஸ்ரீரங்கம் தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள்; தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி பேச்சு
ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு கேட்க சென்ற தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி திருவளர்சோலை கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
கொண்டையம்பேட்டை, பனை யபுரம்,திருவானைக் கோவில், பெரியார்நகர், கிளிக்கூடு, உத்தமர்சீலி, ஸ்ரீரங்கம், வீேரஸ்வரம், வடக்கு ஐந்தாம் பிரகாரம், பாரதி தெரு, நரியன்வீதி, கருடமண்டபம், மேலூர், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், சாத்தார வீதிகள் ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்க சென்றார். அப்போது அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
மக்களுக்கு சேவை செய்ய இந்த முறை எனக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். தி.மு.க. இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறும். மக்களாகிய உங்கள் அமோக ஆதரவு எனக்கு உண்டு என்பதை நீங்கள் இங்கு என்ைன வரவேற்கும் போது கண்டிப்பாக தெரி கிறது. தி.மு.க. அறிவித்த தேர்தல் வாக் குறுதிகளான மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, அரசு உள்ளூர் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா வசதி, நீட் தேர்வு ரத்து, மகளிர் சுயஉதவிகுழு கடன் தள்ளுபடி, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றை எடுத்துக்கூறி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி ஓட்டு சேகரித்தார். இவருடன் கூட்டணி கட்சி நிர் வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story