திருவள்ளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது


திருவள்ளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 26 March 2021 7:02 PM IST (Updated: 26 March 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர், 

இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் பஸ் நிலையம் அருகே திருவள்ளூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் விக்னேஷ் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் வன்னியர் தெருவை சேர்ந்த சலீம் (வயது 37) என்பவர் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சலீம் இரு சக்கர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாகவும், பொருட்களை வினியோகம் செய்தவர்களுக்கு கொடுப்பதற்காக அந்த பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை கொண்டு சென்ற காரணத்தால் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Next Story