கோவில்பட்டி தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி


கோவில்பட்டி தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 26 March 2021 7:28 PM IST (Updated: 26 March 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்  சாவடிகளில் பணியாற்றும் 1,868 பேருக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்தது. 
உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம் பயிற்சி வகுப்பை நடத்தினார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து மதியம் ஆசிரியர்கள் வாக்குப்பெட்டியில் தபால் வாக்குகளை போட்டனர்.
பயிற்சி வகுப்பை தொகுதி தேர்தல் பார்வையாளர் அஸ்வின் குமார் சவுதாரி, தேர்தல் சிறப்பு அலுவலர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினர். இதில், கோவில்பட்டி உதவி கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கரநாராயணன், தாசில்தார்கள் ராஜ்குமார், அமுதா, முத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story