100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்


100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்
x
தினத்தந்தி 26 March 2021 8:45 PM IST (Updated: 26 March 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.

ராணிப்பேட்டை

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.

தேர்தலின்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில், ‘‘100 சதவீதம் வாக்களிப்பீர், வாக்களிப்பது நமது கடமை, தேர்தல் நாள் 6.4.21’’ என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு பால் பாக்கெட்டுகளை வினிேயாகிக்க முடிவு செய்யப்பட்டது,

இவ்வாறு விழிப்புணர்வு வாசகங்களுடன் பால் பாக்கெட்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
bzஅப்போது அவர் பேசுகையில், ‘‘மாவட்டத்தில தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்றது வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது்.

இவற்றில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் அச்சிடப்பட்ட பால் பாக்கெட்கள் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை பொது மக்களுக்கு வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளான 6.4.21 அன்று 100 சதவிகித வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.




Next Story