நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு உறுதுணையாக இருந்தோம் தொண்டாமுத்தூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம்
சொல்வதை செய்பவர் எடப்பாடி பழனிசாமி என்றும், நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு உறுதுணையாக இருந்தோம் என்று தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
பேரூர்,
தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செலம்பனூர் பகுதியில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தொகுதி மக்களுக்கு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். அ.தி.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் 6 சிலிண்டர் இலவசம், குடும்பத்தலைவிக்கு ரூ.1,500 மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2 ஆயிரம் அறிவித்துள்ளோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர்களை தொகுதி தொகுதி பக்கம் காணவில்லை. ஆனால் நாங்கள் அப்படியல்ல.
கொரோனா காலத்தில் 23 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள், காய்கறி, முட்டை, சத்து மாத்திரை உள்ளிட்டவை வழங்கினோம். நெருக்கடி யான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உறுதுணையாக நின்றோம். என்னை பொறுத்தவரை என்றும் உங்களின் சகோதரனாக இருந்து பாடுபடுவேன்.
கோவை மாவட்டத்தில் தி.மு.க.வுக்காக பாடுபட்ட எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், காங்கேயத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து மு.க.ஸ்டாலின் போட்டியிட வைத்துள்ளார். அவர் என்னை திட்டுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
நான் என்றும் மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றுபவன். எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்துக்கு ஏராளமான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும், கோவைக்கு செய்தது இல்லை. சொன்னதை செய்பவர் எடப்பாடி பழனிசாமி. சொன்ன எதையும் செய்யாதவர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். இதில் ஒன்றிய தலைவர் வி.மதுமதி விஜயகுமார், மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story